Enable Javscript for better performance
வெள்ளலூர் குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளலூர் குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி உண்ணாவிரதம்

    By கோவை,  |   Published on : 21st June 2014 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளலூர் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி, வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை வெள்ளலூர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமாக சுமார் 624 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 700 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் சுற்றியுள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகவும், குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் வசித்து வரும் பெரியவர்கள், குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற திருச்சி மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கண்டித்து,

    குப்பைக் கிடங்கு எதிர்ப்புக் குழு சார்பில் வெள்ளலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.ஆனால் காவல் துறையின் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழு உறுப்பினர்கள் ஆனந்தகுமார், டேனியல், வேணுகோபால், தங்கவேல், சந்திரசேகர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    இதற்கிடையில் குப்பைக் கிடங்கு விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் லதா தலைமையில் ஜூன் 23-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai