சுடச்சுட

    

    கோவை அரசு பொருட்காட்சியை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலமாக அரசுக்கு ரூ. 43.66 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி மே 3- ஆம் தேதி தொடங்கியது. இதில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 15-ம், சிறியவர்களுக்கு ரூ. 10-ம் நிர்ணயிக்கப்பட்டது.

    இப்பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி - மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, சிறு - குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பொருட்காட்சியை கடந்த 43 நாள்களில் 2,51,252 பெரியவர்ககளும், 59,752 சிறியவர்ககளும் என மொத்தம் 3,11,004 பேர் பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர்.

    இதன்மூலமாக அரசுக்கு ரூ. 43,66,300 வருவாய் கிடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் ரூ. 19,350 வசூலானது. இப்பொருட்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 22) நிறைவுபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai