சுடச்சுட

  

  பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஏவிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக பாலைவனத் தடுப்பு மற்றும் வறட்சி எதிர்ப்பு தின விழா அனுசரிக்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார். இதில், மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாப்பதன் மூலமாக மழை பெற முடியும், அதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.

  மேலும் மாணவர்களுக்கு, "காடு வளர்ப்போம், கனமழை பெறுவோம்' என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. விழிப்புணர்வு ஊர்வலம், "பாலைவனம் இல்லா சோலைவனம்' என்ற தலைப்பில் கண்காட்சி ஆகியன நடைபெற்றன. இதில், மாணவ, மாணவிகள் மாதிரிகளை பார்வைக்கு வைத்திருந்தனர் . சிறந்த திறன்களை வெளிப்படுத்தியவர்களுக்கு பள்ளி முதல்வர் சந்திரா வரதராஜுலு பரிசு வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai