சுடச்சுட

    

    கோவை வழியாகச் செல்லும் ரயில்களின் நேரத்தில் மாற்றம்

    By கோவை  |   Published on : 22nd June 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 12 ரயில்களின் சேவை மற்றும் அட்டவணை விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

    கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், போத்தனூர் வழியாக இயக்கப்படும் சில ரயில்களை கோவை வழியாக இயக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    ஆனால், போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நின்று செல்லாது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், போராட்டக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறிவிப்பை திரும்பப் பெற்றது தெற்கு ரயில்வே. அதே நேரத்தில் அட்டவணை மாற்றப்பட்ட ரயில்கள், கோவையில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டது.

    தற்போது சேலம் கோட்டத்திற்கு உள்பட்டு இயங்கி வரும் 16 விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றம் செய்யப்படவுள்ளன. மேலும் ரயில்களின் நேரம் மற்றும் ரயில் எண்களிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 13-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வெஸ்ட் கோஸ்ட், ஆலப்புழை, ஷாலிமார், பாட்னா, கோர்பா உள்ளிட்ட சில விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றப்படுகின்றன.

    மேலும் கோவை-மன்னார்குடி ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோவை வழியாக இயக்கப்படாத ரயில்களான ஏற்காடு எக்ஸ்பிரஸ்,

    பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் நேரமும் ஜூலை 13-ஆம் தேதிமுதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai