சுடச்சுட

    

    சின்னதடாகம் ஊராட்சியில் 722 வீடுகளுக்கு இலவச கழிப்பறை

    By பெ.நா.பாளையம்  |   Published on : 22nd June 2014 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னதடாகம் ஊராட்சியில் 722 வீடுகளுக்கு இலவச கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன.

    பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சின்னதடாகம் ஊராட்சி சுகாதாரத் தன்னிறைவு பெறும் நோக்கில், தமிழக அரசின் மாவட்ட அளவிலான ஓடிஎஃப் என்ற திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் இலவச கழிப்பறைகள் கட்டித்தரப்படவுள்ளன.

    இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிடம் என்ற அடிப்படையில் இலவசக் கழிப்பறை கட்டிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டு, அதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பயனாளிகளாக 722 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் கட்டமாக 25 வீடுகளுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் டி.என்.வேலுசாமி தலைமை வகித்தார். கழிப்பறைகளை பயனாளிகளிடம் ஒப்படைத்த அவர் பேசுகையில், "சின்னதடாகம் ஊராட்சியில் கழிப்பறை இல்லாத வீடே இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலும், சாலையோரங்களில் மலம் கழிக்கக் கூடாது என வலியுறுத்தியும் இக்கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. தமிழக அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்ட ரூ. 11,100 வழங்குகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே, கோவை அக்னி ரவுண்ட் டேபிள் 133 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு கழிப்பறைக்கும் கூடுதலாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டு, மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு கட்டப்பட்டு வருகின்றன. இதனால் சாலையோரங்களை கழிப்பறையாக பயன்படுத்துவது தடுக்கப்படுவதுடன், இந்த ஊராட்சி 100 சதவீதம் முழு சுகாதாரம் அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

    இந்நிகழ்ச்சியில், ரவுண்ட் டேபிள் திட்ட அமைப்பாளர் குகன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், உதவி அலுவலர் ஹேமலதா, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன், கவுன்சிலர்கள் மாணிக்கராஜ், சாரதா, கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai