சுடச்சுட

    

    சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை

    By கோவை,  |   Published on : 22nd June 2014 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்கள் மீதான குடும்ப வன்முறை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாதர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், கோவை வடக்கு நகர மாநாடு சனிக்கிழமை ரத்தினபுரியில் நடைபெற்றது. முன்னதாக மாநாட்டுப் பந்தலின் முன்பாக தொடர்ந்து பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் கொடுமைகள், குடும்ப வன்முறைகளைக் கண்டித்து மாவட்டச் செயலாளர் எஸ்.புனிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இம்மாநாட்டில், தொலைக்காட்சி, சினிமா ஊடகங்களில் பெண்களை இழிவாக சித்தரிப்பதைத் தடுக்கவேண்டும். பொது விநியோக முறையை பலப்படுத்தவேண்டும். பள்ளி மாணவிகள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்க அரசுத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    வடக்கு நகரத்திற்கு உள்பட்ட சேர்மன் ராஜூ நகர் மற்றும் சங்கனூர் பள்ளம் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும். பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் அகற்றப்படாமல் உள்ள காமராஜபுரம் அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்றவேண்டும்.

    கோவை, கணபதி பேருந்து நிலையத்திற்கு வராமல் மாலை நேரத்தில், காந்திபுரம் பேருந்து நிலையத்துடன் திரும்பிச் செல்லும் பேருந்தை (வழித்தட எண்: 3) கணபதி பேருந்து நிலையம் வரை வந்து, செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இம்மாநாட்டில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ராதிகா, பொருளாளர் எஸ்.ராஜலட்சுமி, சிபிஎம் வடக்கு நகரக்குழுச் செயலாளர் என்.ஆர்.முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கே.எஸ்.கனகராஜ், கணபதி கூட்டுறவு சங்க இயக்குநர் கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai