சுடச்சுட

    

    சிறுமுகை வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் சுமார் 10 வயதுடைய ஆண் யானை குடல்புழு நோய்த் தாக்குதலால் உயிரிழந்தது.

    சிறுமுகை வனச்சரக அலுவலர் சேகர் தலைமையில் வனவர் சுரேஷ், வனக் காவலர் ராமமூர்த்தி ஆகியோர் வனப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்யச் சென்றனர்.

    அப்போது, சிறுமுகையை அடுத்துள்ள கூத்தாமண்டி பிரிவையடுத்த பவானிசாகர் நீர் தேக்கப் பகுதியான, இச்சிபாலி என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு லிங்காபுரம் கால்நடை மருத்துவர் தியாக ராஜனுடன், வனத் துறையினர் விரைந்தனர்.

    அங்கு இறந்து கிடந்த யானையை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், அங்கேயே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனைக்குப் பின், சுமார் 10 வயதுடைய அந்த ஆண் யானை, குடல்புழு நோய்த் தாக்கியதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai