சுடச்சுட

    

    கோவை எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள டைடல் பார்க் மற்றும் விப்ரோ நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தவும், அவிநாசி சாலை மற்றும் பொருளாதார மண்டலத்தை இணைக்கும் சாலையில் மேம்பாலம் அமைக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், விப்ரோ நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளையும், டைடல் பார்க்கில் உள்ள ஐ.டி. நிறுவனப் பிரதிநிதிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில், தகவல் தொழில்நுட்பச் செயலர் ராமச்சந்திரன், எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த், ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.சின்னசாமி, வி.சி.ஆறுக்குட்டி, சேலஞ்சர் துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai