சுடச்சுட

  

  நீலம்பூரில் பி.எஸ்.ஜி.சுயநிதி பொறியியல் கல்லூரி தொடக்கம்

  By கோவை,  |   Published on : 22nd June 2014 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பி.எஸ்.ஜி. கல்விக் குழுமம் சார்பில் நீலம்பூரில் பி.எஸ்.ஜி. சுயநிதி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக, பி.எஸ்.ஜி. கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி. சுயநிதி பொறியியல் கல்லூரி முதல்வர் பி.வி.மோகன்ராம் உள்ளிட்டோர் நிருபர்களிடம் கூறியது:

  கோவையை அடுத்துள்ள நீலம்பூர் பகுதியில் பி.எஸ்.ஜி. சுயநிதி பொறியியல் கல்லூரி நடப்புக் கல்வியாண்டில் இருந்து செயல்பட உள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் 300 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

  இக்கல்லூரியில் அனுபவம் மிக்க 25 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 250 மாணவ, மாணவிகள் தங்கும் வகையில் விடுதி வசதி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலமாக 65 சதவீத இடங்களும், எஞ்சியுள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படும்.

  அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தவிர கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் நிரப்பப்படும் சுயநிதி ஒதுக்கீடு இடங்களுக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 190-க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் புதிதாக மெட்டீரியல் சயின்ஸ் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், கெமிக்கல் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல, ஆர்க்கிடெக்ட் பாடப் பிரிவுக்கு தனியாக ஒரு மையமும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. பிரிவில் 18 பாடங்களில் 1,350 பேர் சேர்க்கப்படுகின்றனர்.

  புதிதாக கட்டப்பட்டுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரி பசுமைக் கட்டட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai