சுடச்சுட

    

    புஜங்கனூர் விநாயகா வித்யாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு துவக்க விழா

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 22nd June 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடையை அடுத்துள்ள புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். முதல்வர் பிரேமா முன்னிலை வகித்தார். யுகேஜி மாணவி சல்கா வரவேற்றார். பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

    இதில், பெரியநாயக்கன்பாளையம் ஜிகேடி மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரசன்ன ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மழலையர் வகுப்புகளைத் துவக்கி வைத்து, புதிதாகச் சேர்ந்துள்ள குழந்தைகளை வாழ்த்திப் பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரி-கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் நடனமாடினர்.

    இதில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். யுகேஜி மாணவன் உதயமாரன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai