சுடச்சுட

  

  கோவை மாநகராட்சி சார்பில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் போட்டிகளை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

  கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ரங்கோலி மற்றும் ஓவியப் போட்டிகளில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர். 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் ஒரு பிரிவாகவும், 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் மற்றொரு பிரிவாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் வேறொரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.

  மொத்தம் 171 மாணவியர் ரங்கோலி போட்டியிலும், 414 மாணவ, மாணவியர் ஓவியப் போட்டியிலும் கலந்து கொண்டனர். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் விவரம் அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 28-ஆம் தேதி வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கண்காட்சியில் பரிசுகள் வழங்கப்படும்.

  துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்திபன், கணக்கு குழுத் தலைவர் கணேசன், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், உதவி ஆணையர்கள் ரவி, அமல்ராஜ், சுந்தரராஜ், சுப்ரமணியன், சரவணன், மாமன்ற

  உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai