சுடச்சுட

    

    ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது .

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆ.சங்கரசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநர் யு.அசோகன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின்

    முக்கியத்துவத்தையும், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், குடிநீர் தட்டுப்பாடு, நீர் மாசுபடுதல், உலகம் வெப்பமயமாதல் மற்றும் அசுத்தமான நீரினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விளக்கி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டக் குழுவினர், எக்கோ வாட்ச் கிளப் குழுவினர் மற்றும் சமுதாய மேம்பாட்டுத் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai