சுடச்சுட

    

    மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம்:"சி பாரம்' பிரச்னையை தீர்க்க கோப்மா கோரிக்கை

    By கோவை,  |   Published on : 22nd June 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் செய்யும்போது ஏற்படும் "சி பாரம்' பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சங்கத் தலைவர் கே.மணிராஜ், மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதம்:

    அகமதாபாத், கோவையில் மட்டும் பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இத் தொழிலில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் பம்ப்செட் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கும் அதைச் சார்ந்து ஜாப்-ஒர்க் செய்யும் குறுந்தொழில் முனைவோருக்கும் 7 சதவீத வட்டியில் சொத்துப் பிணையமின்றி கடன் வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். பம்ப்செட் மீது கடந்த 2006-இல் விதிக்கப்பட்ட 6 சதவீத கலால் வரியை நீக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை குறுந்தொழில் கூடங்கள் மற்றும் ஃபவுண்டரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட ஆள் பற்றாக்குறை நீங்கும்.

    கடந்த 2009-ஆம் ஆண்டு சி.எஸ்.டி. வரி 2 சதவீதத்தை ஒவ்வோராண்டும் 1 சதவீதம் குறைக்கப்பட்டு நீக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இன்று வரை அது நீக்கப்படவில்லை. மாநிலங்களுக்கு இடையில் வர்த்தகம் செய்வோருக்கு சி பாரம் பிரச்னை பெருமளவில் உள்ளது. இதை முழுவதும் நீக்க வேண்டும்.1

    குறுந்தொழில் முனைவோர், தொழிலாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் குறைந்த பிரிமியத்தில் உடல் நல காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உணவு மற்றும் மூலப் பொருள்களைப் பதுக்கல் செய்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்ப்செட் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களைத் தயாரிக்கும் சில உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பண வீக்கம் 3 சதவீதமாக இருந்தபோது ரூ.2 லட்சம் வரை வருமான வரி விலக்கு சலுகையளிக்கப்பட்டது. இப்போது பண வீக்கம் 6 சதவீதமாக அதிகரித்துள்ளபோது வருமான வரி விலக்கை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பெண் தொழில் முனைவோருக்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கும் வருமான வரி, சொத்து வரிகளில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai