Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்: 181 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கை, கால் பாதிக்கபட்டவர்கள், காது கேளாத பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுமார் 181-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விண்ணப்பங்களை வழங்கினர். இதில் பங்கேற்ற 181 பயனாளிகளில் 41 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    மேலும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளையும், 10 மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும் ஆட்சியர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன், புதுவாழ்வு திட்ட மேலாளர் பிலிப், அனைவருக்கும் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த மதன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai