சுடச்சுட

  

  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்

  By பொள்ளாச்சி,  |   Published on : 22nd June 2014 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதியிலும் வெற்றிபெற்று வரலாற்றுச் சரித்திரம் படைக்கும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறினார்.

  அதிமுக அரசின் 3 ஆண்டு கால சாதனையை விளக்கியும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ததற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளியில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்திற்கு பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான சுகுமார் தலைமை வகித்தார்.

  இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியது:

  தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலம் நடைபெற்ற ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு பயன்களை அடைந்தனர். மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தந்துள்ளனர். கடந்த 1947-ஆம் ஆண்டுக்குப் பின், தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்து 37 தொகுதிகளில் வெற்றிபெற்றதில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, யாருடனும் கூட்டணி அமைக்காமல், மக்கள் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, மக்களுடன் கூட்டணி அமைத்ததற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

  இதில், அதிமுக தலைமை நிலையப் பேச்சாளர் பாலகிருஷ்ணன், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி துணைத் தலைவர் இளஞ்செழியன், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன், அதிமுக செயலாளர் நரிமுருகன், மாவட்ட கவுன்சிலர் ரங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai