Enable Javscript for better performance
175 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை வரதராஜபுரத்தில் 175 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    வரதராஜபுரம் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் 175 கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சின்னசாமி முன்னிலையில் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார்.

    இதில், கர்ப்பிணிகளுக்கு சீமந்த சீர்வரிசையாக ஒரு தட்டு, சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்புகள், வெற்றிலை, பாக்கு, மாங்கனி, நெல்லிக்கனி, சாத்துக்குடி, வாழைப்பழம், குங்குமச்சிமிழ், பூ, மற்றும் மஞ்சள் கயிறு அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டலத் தலைவர் ஜெயராம், சிந்தாமணி கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் சிங்கை முத்து, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சிங்கை எஸ்.பாலன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai