Enable Javscript for better performance
கட்டுமானத் தொழிலாளர்கள் ஜூலை 14-இல் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    நலவாரிய நிர்வாகத்தைக் கண்டித்து கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் ஜூலை 14-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

    கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்க (ஏஐடியுசி) மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் எஸ்.பி.தியாகராஜன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில், தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களை முடக்கும் நோக்கில் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழகம் முழுவதும் வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு உதவித் தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்டவற்றுக்கு கேட்பு மனுக்கள் மீது உதவித் தொகை வழங்கப்படாமல் காலதாமதம் செய்து வருவதைக் கண்டித்து மாவட்ட அளவில் வரும் ஜூலை 14-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில், மாநில துணை பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai