Enable Javscript for better performance
கதிர்நாயக்கன்பாளையத்தில் அதிமுக பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கதிர்நாயக்கன்பாளையத்தில் அதிமுக பிரசாரம்

    By பெ.நா.பாளையம்  |   Published on : 23rd June 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி அதிமுக சார்பில் கதிர்நாயக்கன்பாளையத்தில் தெருமுனைப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன், ஜெயலலிதா பேரவை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, பெ.நா.பாளையம் அதிமுக ஒன்றியச் செயலாளர் கோவனூர் கே.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி அதிமுக செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.

    பிரசாரத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai