சுடச்சுட

  

  பணிக்கொடை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வலியுறுத்தி, கலாசி தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

  கோவை நகரில் சுமார் 3 ஆயிரம் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரம் பேர் கட்சி சார்பற்ற கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் பணிக்கொடை குறித்து, லாரி உரிமையாளர் சங்கங்களுடன் பேசி ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம்.

  இதில் கோயமுத்தூர் குட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷனுடன் பணிக்கொடை குறித்து செய்யப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்தது. எனவே, புதிய ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை லாரி உரிமையாளர் சங்கம் பரிசீலிக்கவில்லை. இதற்கிடையில் 50 தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே அவர்களுக்கான பணிக்கொடை குறித்துப் பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் பணிக்கொடை ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை (ஜூன் 23) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பி.சுப்பரமணி, பொதுச்செயலாளர் பி.ஏ.காளிமுத்து, பொருளாளர் எம்.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai