சுடச்சுட

    

    கோவையில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் ரூ. 54 கோடியில் நவீன தொழில் நுட்பத்தில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக ஆவின் தலைவர் ப.வெ.தாமோதரன் கூறியது:

    தமிழக முதல்வரின் உத்தரவுப்படி ஆவின் நிறுவனம் ரூ. 54 கோடியில் நவீன மயமாக்கப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 583 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 2.45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    கொள்முதல் செய்யப்பட்ட பால், பேரூர் அருகிலுள்ள குளிரூட்டு நிலையத்தில் பதப்படுத்தப்படுகிறது.

    பின்னர் 1.50 லட்சம் லிட்டர் பால், கோவை, திருப்பூர் நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. உபரி பால் சென்னைக்கு அனுப்பப்படுவதுடன், ஆவின் நிறுவனம் மூலமாக பால் பவுடர், நெய், வெண்ணெய் போன்றவை தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், நவீனத் தொழில் நுட்பத்தில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்தவுடன் பால் கொள்முதலை 5 லட்சம் லிட்டராக அதிகரித்து சீரான முறையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஆவின் பொதுமேலாளர் ஆர்.ரவிகுமார், துணை மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

    கட்டிமுடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம் திறக்கப்பட வேண்டும் மதுக்கரை வட்டத்துக்கு உள்பட்ட பாலத்துறை சின்ன விநாயகர் கோயில் வீதியில் கட்டிமுடிக்கப்பட்ட பொதுக் கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுக்கரை வட்டம், பாலத்துறை பகுதியில் கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 3.25 லட்சம் மதிப்பீட்டில் பாலத்துறை, சின்ன விநாயகர் கோயில் வீதியில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி நடைபெற்றது.

    இப்பணி, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பிடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai