Enable Javscript for better performance
சங்கனூர் பள்ளத்தில் புதிய பாலம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை, சங்கனூர் பள்ளத்தின் குறுக்கே கணேஷ் நகர் - காந்திபுரம் 5ஆவது வீதியை இணைக்கும் வகையில் ரூ. 64.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசுகையில், கணேஷ்நகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் (பொறுப்பு) மேயர் சு.லீலாவதி உண்ணி, மாநகராட்சி ஆணையர் க.லதா, எம்எல்ஏக்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, சேலஞ்சர் துரை, ஆர்.சின்னசாமி, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், ராஜ்குமார், பெருமாள்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai