Enable Javscript for better performance
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 3.5 மீட்டர் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 3.5 மீட்டர் உயர்ந்துள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. இதனால் மாநகர மக்களுக்கு வழங்கும் குடிநீரின் அளவும் குறைந்தது. அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 864.20 அடியாக இருந்தது.

    தற்போது, கேரளத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து 50 மி.மீ.க்கு குறைவில்லாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3.5 மீட்டராக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 867.4 அடியாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai