சுடச்சுட

    

    துடியலூர் அருகே நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகரில் குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்றம், சோமையனூர் பிஷப் வால்ஷ் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமிற்கு, ஊராட்சி உறுப்பினர் குமாரசாமி முன்னிலை வகித்தார். முகாமை ஊராட்சித் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார்.

    முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ராஜாமணி, சினேகா ஆகியோர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர். தொற்று நோய்கள் தாக்காமல் இருக்க இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

    பங்குத் தந்தை ஜேக்கப், ஊராட்சி துணைத் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை நிர்வாக அலுவலர் ஆப்ரகாம் பிலிப் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai