சுடச்சுட

    

    தெற்கு மண்டல பகுதியில் 7 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம்

    By கோவை  |   Published on : 23rd June 2014 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் 7 இடங்களில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

    குனியமுத்தூர் பகுதிக்கு உள்பட்ட தெற்கு மண்டலத்தில் 90}ஆவது வார்டு, கோவைப்புதூர் என்-பிளாக் பகுதி, 91}ஆவது வார்டில் லட்சுமி நகர், லாவண்யா கார்டன், வசந்தம் நகர் ஆகிய 3 இடங்கள், 92}ஆவது வார்டில் கிருஷ்ணசாமி நகர் மற்றும் கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகள், 93}ஆவது வார்டு, பெரியார் நகர் சர்ச் வீதியிலும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் 7 இடங்களில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலிருந்து தண்ணீர் விநியோகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியது: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட குனியமுத்தூர் மற்றும் குறிச்சி பகுதிகளுக்கும் சிறுவாணி, ஆழியாறு, பில்லூர் குடிநீர்த் திட்டங்களிலிருந்தும் விரைவில் தேவையான அளவு குடிநீர்க் குழாய்கள் இணைக்கப்பட்டு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் கிடைத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதிகளில் தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, தெற்கு மண்டலத் தலைவர் எம்.பெருமாள்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai