Enable Javscript for better performance
புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புனித அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 23rd June 2014 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் உதகை சாலையிலுள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த ஆலயத்தில் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் புதுநன்மை மற்றும் உறுதி பூசுதல் வழங்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தேர்த் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை 8 மணியளவில் ஆலய வளாகத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் தலைமையில் திருப்பலியும், அதைத் தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றன. இதில், ஆலயப் பங்கு தந்தைகள் பால் சகாயராஜ், டான் போஸ்கோ உள்பட ஆலய உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து வரும் 26-ஆம் தேதி காலை முதல் மாலை வரை சூலூர் சகாய மாதா ஜெபக்குழுவைச் சேர்ந்த சகோதரர் யேசுதாஸ் தலைமையில் அமாவாசை ஜெப வழிபாடும், அன்று மாலை புனித ஜான் போஸ்கோ ஆலய பங்குத் தந்தை சைமன் பீட்டர் சார்பில் திருப்பலி, மறையுரை மற்றும் நவநாள் வேண்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    27-ஆம் தேதி மாலை புனித மரியன்னை பள்ளி தலைமையாசிரியர், பங்குத் தந்தை பீட்டர் மரியதாசின் திருப்பலி மற்றும் மறையுரையும், 28-ஆம் தேதி மாலை திருப்பலி மறையுரையும் நடைபெறுகின்றன.

    29-ஆம் தேதி காலை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் சார்பில் சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை மற்றும் உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை 7 மணிக்கு மேட்டுப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளின் வழியே புனித அந்தோணியாரின் தேர் பவனியும், நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற உள்ளன. ஜூலை 6-ஆம் தேதி காலை திருப்பலியுடன் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai