சுடச்சுட

    

    "பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'

    By பெ.நா.பாளையம்,  |   Published on : 23rd June 2014 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுமையான வளர்ச்சி பெற எல்லா நிலைகளிலும் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ் பேசினார்.

    கோவை, கவுண்டம்பாளையம் கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் 7-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி இணைச் செயலர் ஏ.வாசுகி தலைமை வகித்தார். முதல்வர் டி.முரளீஸ்வரி வரவேற்றார்.

    இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரிக் கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ் பேசியது:

    தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர் என்பதையே காட்டுகிறது. கல்வியின் பயன், மதிப்பெண்கள் மட்டுமல்ல. நற்பண்புகளை கற்பதுடன் நாட்டிற்கும், வீட்டிற்கும் நலம் பயக்கும் பணிகளைச் செய்வதே அதன் பயனாக அமையவேண்டும். நல்லொழுக்கத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

    பட்டம் பெற்றவுடன் இளைய சமுதாயத்தினர் மிகுந்த ஊக்கத்துடன் முன்னேற வேண்டும். இதன் வாயிலாக தேசத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். நாடு முழுமையான வளர்ச்சி பெற எல்லா நிலைகளிலும் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அவர், முதுநிலை, இளநிலை படிப்பை முடித்த 700-க்கு மேற்பட்டவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி துறைத் தலைவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai