Enable Javscript for better performance
முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மூன்று நாள் கருத்தரங்கம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மூன்று நாள் கருத்தரங்கம் நிறைவு

    By கோவை,  |   Published on : 23rd June 2014 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் உள்ள ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

    ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையம், முழங்கால் மூட்டு ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறது.

    இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 200-க்கு மேற்பட்ட நுண்துளை மற்றும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

    பிரிட்டனின் நுண்துளை சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்டி வில்லியம்ஸ், கொரியாவின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோன் கோ வாங்க் ஆகியோர் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.முழங்கால் மூட்டு சம்பந்தமான அனைத்து விதமான அதிநவீன மாற்றங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய முழுமையான செயல் விளக்கங்களை அவர்கள் வழங்கினர். மேலும், முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையின் நுணுக்கங்கள் மற்றும் உலகத்தரத்தில் சிகிச்சை முறைகளைச் செயல்படுத்த உதவும் உத்திகள் குறித்து விளக்கினர்.கருத்தரங்கின் மூன்றாவது நாளில் கால்பந்து பயிற்சியாளர்கள் மற்றும் பிசிகல் தெரபிஸ்டுகளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக ஆசியன் கால்பந்து கூட்டமைப்பின் பயிற்சியாளர் பைசல் சன்டாராபிடக் பங்கேற்று, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்படும் முழங்கால் மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார்.ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின் தலைவர் டேவிட்

    வி. ராஜன், மருத்துவமனை இயக்குநர் கே.வினோத் உள்ளிட்டோர் சர்வதேச கருத்தரங்கிற்கான

    ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai