சுடச்சுட

    

    கோவை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.

    கோவை, நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா (29). எலக்ட்ரிக்கல் பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர், சனிக்கிழமை குனியமுத்தூர் சாலை, பாலதண்டாயுதபாணி கோவில் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கேரளத்தில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவகுமாரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai