சுடச்சுட

  

  அன்னூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

  திரைப்பட நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து, விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்த தானம் செய்தனர்.

  அன்னூர் நாகம்மாபுதூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் செல்வராஜ், விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றியத் தலைவர் ரவிக்குமார், செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  முகாமில், 40-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மேலும், மதியம் நல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai