சுடச்சுட

  

  முகவரியே இல்லாதவர்களை உலகிற்கு முகவரி கொடுப்பதுதான் கல்வி என கவிஞர் கவிதாசன் பேசினார்.

  கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக மற்றும் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  கல்லூரி செயலர் கே.பழனியப்பன் வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

  விழாவில் கவிஞர் கவிதாசன் பேசியது: கட்டுக்கோப்பான பள்ளி வாழ்க்கையில் இருந்து சுதந்திரமான கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும்போது, பல மனச்சிதறல்கள் ஏற்படும். கல்லூரி வாழ்க்கையில்தான் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரி வாழ்க்கை கானல் வாழ்க்கை அல்ல. நிஜ உலகிற்கு அடித்தளம் வகுக்கும் இடம்தான் கல்லூரி.

  நீங்கள் என்னவாக வரவேண்டும் என்பதை தீர்மானியுங்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.

  தினமும் கற்க வேண்டும். உங்களின் வாழ்க்கை முன்னேற கல்வியை கற்க வேண்டும். முகவரியே இல்லாதவர்களுக்கு உலகிற்கு முகவரி கொடுப்பதுதான் கல்வி.

  தினமும் திட்டமிட்டு மதிப்பெண்களுக்காக மட்டுமின்றி வாழ்க்கைக்கு உதவும்படி படியுங்கள். சாதனையாளர்களாக வருவதற்கு நல்ல பேச்சுத்திறமை

  வேண்டும். எல்லோரிடத்திலும் எளிதில் பழகும் திறன் வேண்டும். எதனையும் ஈடுபாடுடன் செய்ய வேண்டும்.

  குழந்தைகளை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் முயற்சியில் தோல்வி அடையும்பொழுது பாராட்டுங்கள். கேவலமாக பேசாதீர்கள்.

  முயற்சியின் போது எடுத்த பயிற்சி மேலும் நம்மை முயல வைக்கும். முயற்சியின் போது ஏற்படும் தோல்விகள் தான் நாம் எடுத்த முயற்சியை முழுமையாக்கும் என்றார்.

  விழாவில் கல்லூரி முதல்வர் கே.சுந்தரராமன், துணை முதல்வர் பி.பாபா ஞானகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai