சுடச்சுட

  

  ஏற்றுமதி தொழில் துவங்குவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான இரு வாரப் பயிற்சி முகாம் வரும் ஜூலை 7-ஆம் தேதி கோவையில் துவங்க உள்ளது.

  இதுதொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தின் கோவை உதவி இயக்குநர் பி.கயல்விழி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  குறு, சிறு தொழில் முனைவோரும், ஏற்றுமதி தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். வரும் ஜூலை 7-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவை ராம் நகர் எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இப் பயிற்சி குறித்த அறிமுக வகுப்பு வரும் 29-ஆம் தேதி நடைபெறும்.

  ஏற்றுமதி சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி நிறுவனத்தைத் துவங்குதல், ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருள்கள் குறித்த விவரம், ஏற்றுமதி உத்திகள், இணையதளம் மூலம் சந்தைப்படுத்துதல், அரசின் கொள்கைகள், ஏற்றுமதி விசாரணைகளைப் பெறும் வழிமுறைகள், இறக்குமதியாளரை மதிப்பீடு செய்தல், பரிவர்த்தனை வழிமுறைகள், காப்பீடு செய்தல், விலை நிர்ணயம் செய்தல், பொருள்களை அனுப்பும் வழிமுறைகள், ஏற்றுமதிப் பொருள்கள் ஆய்வு, சுங்கம், ஆயத்தீர்வை குறித்த வழிமுறைகள், ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்த விவரங்கள் முகாமில் வழங்கப்படும்.

  குறு, சிறு தொழில் நிறுவனத்தில் தொழில் முனைவோர், மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் துவங்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இத்துறையில் வேலை வாய்ப்புத் தேடுபவர்கள் முகாமில் பங்கேற்கலாம். 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகாமில் பங்கேற்கலாம். அதிகபட்சமாக 50 பேர் முகாமில் பங்கேற்கலாம். இது தொடர்பாக மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட முகவரியில் அணுகலாம்.

  பி.கயல்விழி, உதவி இயக்குநர், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிலையம், 386, பட்டேல் ரோடு, ராம் நகர் கோவை - 9. தொலைபேசி: 2233956, 2230426.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai