Enable Javscript for better performance
கஞ்சம்பட்டியில் நெசவாளர்களுக்கு மின் ராட்டைகள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    கஞ்சம்பட்டியில் நெசவாளர்களுக்கு மின் ராட்டைகள் வழங்கல்

    By பொள்ளாச்சி,  |   Published on : 24th June 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டியில் நெசவாளர்களுக்கு மின்ராட்டைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகுமார் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில், 150 நெசவாளர்களுக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி எம்.பி.மகேந்திரன் ஆகியோர் மின் ராட்டைகளை வழங்கினர்.

    தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மாநிலத் தலைவர் மனோகரன், தமிழ்நாடு பஞ்சாலை கழக இணை இயக்குநர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

    இதில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியது:

    நெசவாளர்களின் வாழ்வு மேம்பட சிறப்பானச் சலுகைகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார். நெசவாளர்கள் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்களது பணியை எளிதாக்கும் விதத்திலும் 25 ஆயிரம் பேருக்கு மின் ராட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது, கஞ்சம்பட்டியில் 150 நெசவாளர்களுக்கு மின் ராட்டைகள் வழங்கப்படுகின்றன. நெசவாளர் குடும்பத்துக்கு ரூ. 30 ஆயிரம் மருத்துவக் காப்பீடும் செய்து தரப்பட்டுள்ளது.

    மேலும், கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai