சுடச்சுட

  

  கலாசி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் சரக்குகள் தேக்கம்

  By கோவை  |   Published on : 24th June 2014 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் பணிக்கொடை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வலியுறுத்தி, கலாசி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன.

  கோவை டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் பணிக்கொடை குறித்து, லாரி உரிமையாளர்கள் சங்ககளுடன் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம்.

  இதில், கோயமுத்தூர் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் உடன் பணிக்கொடை குறித்து செய்யப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் முடிவடைந்தது. எனவே, புதிய ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக் கோரிக்கையை லாரி உரிமையாளர்கள் சங்கம் பரிசீலிக்கவில்லை.

  இதற்கிடையில் 50 தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே அவர்களுக்கான பணிக்கொடை குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து

  திங்கள்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பாரம் தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

  இதனால் மாநகரம் முழுவதும் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்தன. எனவே, பணிக்கொடை தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என கலாசி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai