சுடச்சுட

  

  கூடைப்பந்து போட்டி: கோவை ஸ்பார்டர்ன் அணி வெற்றி

  By அன்னூர்,  |   Published on : 24th June 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னூர் ஏ.முத்துக்கவுண்டர் நினைவுச் சுழற்கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.

  இந்த போட்டிகளில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில் முதலிடத்தை கோவை ஸ்பார்டர்ன் அணி பிடித்தது. ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாமிடத்தையும், ரீனா வோட்டர் அணி மூன்றாமிடத்தையும், பி.ஏ.சி.இ.ஆர். அணி நான்காமிடத்தையும் பிடித்தன.

  வெற்றி பெற்ற அணிகளுக்கு அன்னூர் கூடைப்பந்து கழகச் செயலாளர் கார்த்திகேயன், தலைவர் சுந்தரம், பொருளாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ. 15,000, ரூ. 10,000, ரூ. 5,000, ரூ. 2,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கிராமப்புற அணிக்கானப் பரிசை பொள்ளாச்சி எஸ்.பி.சி. அணி வென்றது. சிறந்த ஜூனியர் அணிக்கானப் பரிசை நவபாரத் பள்ளி அணி வென்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னூர் கூடைப்பந்து கழகமும், அரசு மேல்நிலைப்பள்ளியும் இணைந்து செய்திருந்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai