சுடச்சுட

  

  கோவை மாநகராட்சி சார்பில் மனிதக் கழிவுகளை அகற்றுவோர், சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் குறித்த கணக்கெடுப்பு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

  இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் க.லதா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடக்க உள்ளது. அப் பணியாளர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக, இப் பணி செய்பவர்கள் குறித்த தகவல்களை அவர்களே முன்வந்து பதிவு செய்து கொள்ள வசதியாக வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விடுமுறை நாள்கள் நீங்கலாக மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் புள்ளி விவரக் குறிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப் பணியில் ஈடுபட்ட அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் குடும்ப அட்டை, கல்வித் தகுதி, தற்போது பணிபுரியும் இடம், புகைப்படத்துடன் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai