சுடச்சுட

    

    மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2- க்கான பயிற்சி முகாம் துவக்கம்

    By பெ.நா.பாளையம்  |   Published on : 24th June 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டி மற்றும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை துவங்கியது.

    தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. இதனையொட்டி, இத்தேர்வாளர்களுக்கான ஒருவார காலப் பயிற்சி முகாமை மாவட்ட வேலைவாய்ப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.

    இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், பல்வேறு பாடங்கள் மற்றும் தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கின்றனர். மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குநர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பக மண்டல இணை இயக்குநர் லதா முகாமை துவங்கி வைத்தார்.

    முதல் நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றனர். வரும் வெள்ளிக்கிழமை வரை இப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai