சுடச்சுட

    

    ரிசர்வ் சைட் நிலம் ஆக்கிரமிப்பு: குடும்பங்களுக்கு மாற்று இடம் கோரி மனு

    By கோவை,  |   Published on : 24th June 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கனூர் பகுதியில் அடிப்படை வசதிக்காக வழங்கப்பட்ட ரிசர்வ் சைட் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடமோ, தொகுப்பு வீடோ வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் அதிமுகவின் கோவை மாநகர 45 வது வட்டத்தின் பொருளாளர் பழனிவேல் அளித்த மனு விவரம்:

    கணபதி சங்கனூர் பிரதான சாலையில் உள்ள 114 அருந்ததிய குடும்பங்களுக்கு கடந்த 1961ல் தலா 5 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.

    அப்போதே அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, சமுதாயக் கூடம், பொழுதுபோக்கு பூங்கா என பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க ஏதுவாக 2 ஏக்கர் நிலத்தை ரிசர்வ் சைட்டாக விடப்பட்டது.

    இந் நிலையில், இப் பகுதியைச் சேர்ந்த சிலர் காலியாக விடப்பட்ட அந்த 2 ஏக்கர் ரிசர்வ் சைட் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இதனால் ஏற்கெனவே அங்கு வசித்து வரும் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தர முடியாத நிலை உள்ளது.

    எனவே, ரிசர்வ் சைட்டில் குடியிருப்போருக்கு காலி மனைகளாகவோ அல்லது அரசு தொகுப்பு வீடுகளோ, அடுக்குமாடி வீடுகளோ ஒதுக்கித் தர வேண்டும்.

    குறிச்சி பகுதியில் 100 அடி சாலை ஆக்கிரமிப்பு?

    அதேபோல குறிச்சி ஹவுசிங் யூனிட் திட்டம் 2ல் உள்ள 100 அடி சாலையை சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளை நடத்தி வரும் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில், தொழிற்சாலை நடத்தும் உரிமையாளர்கள் மீண்டும் 100 அடி சாலையை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். இப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai