சுடச்சுட

  

  இமயம் வேளாண்மைக் கல்லூரியுடன் வேளாண் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

  By dn  |   Published on : 25th June 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இமயம் வேளாண்மைக் கல்லூரியுடன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

  நாட்டின் வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு வேளாண் பட்டதாரிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சுயநிதி வேளாண்மைக் கல்லு}hpகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளது.

  அதனடிப்படையில் திருச்சியில், துறையூரில் உள்ள இமயம் கல்வி அறக்கட்டளை, இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை கடந்த கல்வியாண்டில் தொடங்கி நடத்தி வருகிறது.

  சுயநிதி வேளாண்மைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை பெருக்கி அதன் தரத்தினை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

  மாணவர்களை வேளாண் கல்வி பயில அனைத்து வசதிகளும், அதாவது வகுப்பறைகள், ஆயுதக் கூடங்கள், பல்வேறுப்பட்ட பண்ணைகள, வானிலை ஆய்வுகூடம், பண்ணைக்கருவிகள், கால்நடைகள், விளையாட்டு திடல், விடுதி மற்றும் உணவகங்கள், மேலும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்க வேண்டும் என்பதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு.ராமசாமி முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் இரா.ரபீந்திரன், இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலர்  அ. ஆண்டியும் கையெழுத்திட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாற்றிக் கொண்டனர். இமயம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் த. ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai