Enable Javscript for better performance
கோவை ரயில்நிலையத்தில் கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுன்டர்- Dinamani

சுடச்சுட

    

    கோவை ரயில்நிலையத்தில் கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுன்டர்

    By dn  |   Published on : 25th June 2014 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை ரயில்நிலையத்தில் கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.

     ரயில்வே அமைச்சகத்தால் அண்மையில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இக் கட்டண உயர்வு ஜூன் 25 நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்து ஜூன் 25-ஆம் தேதிக்கு பிறகு பயணம் செய்பவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

     இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரயில்களில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகரிடம் கூடுதல் கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ரயில்நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டரில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     பொதுவாக ரயில்களில் 60 நாள்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. எனவே ஜூன் 25-ஆம் தேதிக்கு பிறகு பயணம் செய்ய அதிகளவிலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள்.

     இதற்காக கோவை ரயில்நிலையத்தில் உள்ள 10-வது கவுன்டரில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை பயணிகள் செலுத்தலாம். அதே நேரத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை பொருத்து கூடுதல் கவுன்டர் திறக்கப்படும்.

     தற்போது ரயில்களில் போதிய அளவிலான டிக்கெட் பரிசோதகர் இல்லாத காரணத்தால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது. பொதுவாக ஒரு ரயிலில் உள்ள இரண்டு முன்பதிவு பெட்டிகளுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர் பணி அமர்த்தப்பட வேண்டும்.

     ஆனால் 3 முதல் 4 பெட்டிகள் வரை ஒதுக்கப்படுவதால் ஏற்கனவே பணிச் சுமையால் டிக்கெட் பரிசோதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டி உள்ளதால் டிக்கெட் பரிசோதகர்களுக்கு அடுத்த 60 நாள்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai