சுடச்சுட

    

    சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 25th June 2014 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தி சிஐடியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

     கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இதில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலம் முடிவடைந்து 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி தமிழக அரசு பேச்சுவார்த்தையை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

     இந்நிலையில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகையாக ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசின் அனைத்துறை ஊழியர்களுக்கும் பஞ்சப் படி முறையாக வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால், போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி நிலுவைத் தொகை ரூ100 கோடியாக உள்ளது.

     எனவே அரசு ஊழியர்கள் மத்தியில் பாராபட்சம் பார்க்காமல் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை அரசே ஏற்க வேண்டும். அதே போல ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

     மேலும் 240 நாள்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு போக்குவரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நாயினார், துணை பொதுச் செயலாளர்கள் ஆர்.சேதுராமன், டி.காந்தி, ஜி.பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் கே.நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் எம்.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai