சுடச்சுட

    

    சிங்கப்பூரில் இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ. படிக்க அழைப்பு

    By dn  |   Published on : 25th June 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ. படிக்க கோவை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் எம்.டி.ஐ.எஸ். நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

    சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனம் (எம்.டி.ஐ.எஸ்.), இங்கிலாந்தின் பங்கார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் சார்ந்த 12 மாத எம்.பி.ஏ. முதுநிலைப் படிப்பை வழங்குகிறது.

    பன்னாட்டு சந்தைப்படுத்துதல் சார்ந்த படிப்புகளை சிறப்பாக நடத்தும் உலகின் தலைசிறந்த 15 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பங்கார் பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வளர்ந்து வரும் விற்பனையியல் சார்ந்த கொள்கைகள், புதிய போக்குகள், கருத்து அமைவுகள் ஆகியவை வணிகம் மற்றும் மேலாண்மை சூழலில் கற்பிக்கப்படுகிறது.

    விளம்பரம், பிராண்ட் மேலாண்மை, நிறுவனத்தின் நற்பெயரை காத்தல், வாடிக்கையாளர் சேவை, மக்கள் தொடர்பு, சந்தை ஆய்வு ஆகியவை இப்பாடத் திட்டத்தில் இடம் பெற்று பயன்பாட்டு முறையில் கற்பிக்கப்படுகின்றன.

    ஹானர்ஸ் பட்டப் படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அல்லது அதற்கு மேலான தகுதி அல்லது இணையான வெளிநாட்டு கல்வி தகுதி உள்ளவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு www.mdis.edu.sg என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai