சுடச்சுட

    

    கோவை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

     தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி மது. இவரது மனைவி சின்னபாப்பா (35). இவர்கள் இருவரும் பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்குபாளையம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக சுவர் சின்னபாப்பா மீது விழுந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

     ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னபாப்பா உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai