சுடச்சுட

  

  கோவை அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 11-இல் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் கா.விமலா கூறியது: கோவை மாநகரின் காவல் தெய்வமாகத் திகழும் அருள்மிகு கோனியம்மனுக்கு ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 11-இல் நடக்க உள்ளது.

    கும்பாபிஷேக நிகழ்வுகள் வரும் ஜூலை 3-இல் துவங்குகின்றன. புதிய ராஜகோபுர அமைப்புத் தலத்தில் செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஜூலை 4-இல் கணபதி சிறப்பு வேள்வி, நவகோள்கள், மலைமகள், அலைமகள், கலைமகள் சிறப்பு வேள்வி நடக்க உள்ளது. புதிய ராஜகோபுரத் தங்க கலசங்கள் புனிதமாக்குதல், கலசங்கள் ஊர்வலம், புதிய கலசங்களை ராஜகோபுரத்தில் பொருத்துதல், கண் திறத்தல் நடக்க உள்ளது.

     ஜூலை 9-இல் முளைப்பாலிகையிடுதல், முதல் கால வேள்வி வழிபாடு, தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

    ஜூலை 10-ஆம் தேதி காலையில் இரண்டாம் கால வேள்வியும் மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடைபெறும். ஜூலை 11-ஆம் தேதி அதிகாலையில் நான்காம் கால வேள்வி நடக்க உள்ளது.

    காலை 6 மணி முதல் 8 மணிக்குள் புதிய ராஜகோபுரம், கருவறை விமானங்கள், அருள்மிகு சாந்த விநாயகர், முருகப்பெருமான் மற்றும் அருள்மிகு கோனியம்மன் திருச்சுற்றுத் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். மதியம் சிறப்பு மஹா அபிஷேகம் நடைபெறும். இரவு அருள்மிகு கோனியம்மன் புதிய ராஜகோபுரம வாயில் சிறப்பு ஆராதனை செய்து திருவீதி உலா நடைபெறும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai