சுடச்சுட

    

    மகளிர் ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

    By dn  |   Published on : 25th June 2014 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மகளிர் ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கோவை மேட்டுப்பாளையம் சாலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிர்புறம் அரசு மகளிர் ஐ.டி.ஐ. ரூ.3.5 கோடி செலவில் திறன்மிக மையமாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்மியர் கருவிகள் ஆகிய இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளும், பேஷன் டெக்னாலஜி மற்றும் டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கட்டிங் அன்ட் சூயிங் என்ற ஓராண்டு தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    இத்தொழிற்பயிற்சி நிலையம் மகளிருக்காக மட்டுமே இயங்கி வரும் நிலையம் ஆகும். பயிற்சியில் சேர உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. பயிற்சிக்கான சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    சிறப்பம்சங்கள்:

    மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்ந்து படிக்கும் அனைத்து மாணவியருக்கும் மாதம் தலா ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை (2 செட்), காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து அட்டை வழங்கப்படும்.

    பயிற்சி முடிக்கும் தருவாயில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டண விலை ரூ.50 ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0422-2645778, 8122047178, 8220011662, 8220011559, 98651 28182, 82206 92206.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai