சுடச்சுட

    

    முதலீட்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வட்டி கொடுப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்: ஏடிஜிபி பிரதீப் பிலிப்

    By dn  |   Published on : 25th June 2014 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலீட்டு தொகைக்கு 10 சதவீதத்திற்கு மேல் வட்டி கொடுப்பதாக உறுதி அளிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பிரதீப் பிலிப் தெரிவித்தார்.

     இது குறித்து கோவையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

     தமிழக பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் மோசடிகளை தடுக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இதில் மாவட்ட அளவில் உளவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் முதலீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

     அதே நேரத்தில் சென்னை ஐஐடி உதவியுடன் நிதி நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய வாய்மொழி தகவல் பரிமாற்ற ஒழுங்கு முறை (ஐவிஆர்எஸ்) மூலம் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.  அதோவது வங்கி இல்லாத நிதி நிறுவனங்களின் உண்மை நிலை குறித்து தெரிவிக்கப்படும்.

     இந்த தகவலை பெற 044-64500155 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றும் சில நிதி நிறுவனங்களால் கூட முதலீட்டாளர்களுக்கு சரிவர பணத்தை திரும்பச் செலுத்த முடியாத நிலை உள்ளது.

     இந்நிலையில் முதலீட்டுத் தொகைக்கு 10 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்குவதாக உறுதியளிக்கும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.

     ஈமு கோழி மோசடி தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 23,676 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.485 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக 327 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை மண்டலத்தில் தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     இதே போல பைன் ப்யூச்சர் மோசடி வழக்கில் 16,056  ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 95 கோடி அளவிற்கு சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 2-வது குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     பொதுவாக வளர்ச்சி அடையும் சமுதாயத்தில குறிப்பாக பொருளாதார குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் 50 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. மேலும் குற்றங்கள் முன்கூட்டிய தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     அதே நேரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும். மேலும் இணையதளம் மூலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முதலீடு செயவதற்கு முன்பு நிதிநிறுவனங்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க முதலீட்டாளர்கள் சேகரிக்க வேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai