Enable Javscript for better performance
அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

    By மதுக்கரை  |   Published on : 26th June 2014 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, ஜாகீர்நாயக்கன் பாளையத்தில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீஸார் கூறியது:

    ஆலாந்துறை போலீஸ் எல்லைக்கு உள்பட்ட ஜாகீர் நாயக்கன்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியை போலீஸார் சோதனை செய்தனர். இதில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆலாந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் லாரியை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரான கோட்டைக்காட்டைச் சேர்ந்த ஞானவேல்(27) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai