சுடச்சுட

    

    ஆனைமலை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    ஆனைமலை பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்ககுமார் தலைமை வகித்தார். செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்.பி. மகேந்திரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

    ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 350-க்கு மேற்பட்ட மாணவிகள் இதில் பங்கேற்றனர். ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி, முக்கோணம், காவல்நிலைய வீதி, திரவுபதியம்மன் கோவில் வீதி, மாசாணியம்மன் கோவில் வீதி, நெல்லுக்குத்திப்பாறை வீதி வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    மழைநீர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி சென்றனர், இதில், ஆனைமலை ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி வாசு, ஒன்றிய கவுன்சிலர் வரதராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    பெ.நா.பாளையம், ஜூன் 25: மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    வித்யாலய கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட இப்பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகநாத் சிங் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சந்திரன் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி, எல்.எம்.டபிள்யூ பிரிவு, மில் சாலை, குப்பிச்சிபாளையம் சாலை, கோவை - மேட்டுப்பாளையம் சாலை வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

    இதில் பங்கேற்ற மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai