சுடச்சுட

  

  சிறுவாணி அணைக்கு வரும் குடிநீர் குழாயை அடைத்த கேரள அரசை கண்டித்து கோவை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 196 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

  கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைக்கு வரும் குடிநீர் குழாயை கேரள மாநில அரசு கடந்த சில நாள்களுக்கு முன்னர் அடைத்தது. இதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் க.க. சாவடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட சீமான் உள்பட 196 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும், கேரளத்தில் இருந்து மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

  இந்த மறியல் காரணமாக தமிழக- கேரள சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai