சுடச்சுட

  

  கோவையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 120 கர்ப்பிணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் சீர்ப் பொருள்களை புதன்கிழமை வழங்கினார்.

  கோவை, காந்திபுரம், மாநகராட்சி கலையரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் 120 கர்ப்பிணிகளுக்கு சீர்ப் பொருள்களை வழங்கிப் பேசியது:

  மாநகராட்சி மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சுகாதார செவிலியர்களிடம் கர்ப்பிணிகள் முறையாகப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

  மேலும் அரசு மருத்துவமனைகளிலும் தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படுகின்றன. அரசின் திட்டங்களை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

  மாநகராட்சி மேயர் (பொறுப்பு) எஸ்.லீலாவதி உண்ணி, கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன், கோவை தெற்கு எம்எல்ஏ சேலஞ்சர் துரை, மண்டலக் குழுத் தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai