சுடச்சுட

  

  கோவை, ஆர்.எஸ்.புரம் சவீதா ஹாலில் வியாழக்கிழமை முதல் ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது.

  இதுதொடர்பாக விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம் (பெடக்சில்) வெளியிட்ட செய்தி:

  கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம், பெடக்சில் இணைந்து இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம், சவீதா ஹாலில் நடைபெறும் இக்கண்காட்சியில், வாங்குவோர்- விற்போர் சந்திப்பு, துணி நூல், கார்மென்ட்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களின் கண்காட்சி, விற்பனை இடம்பெற உள்ளது. கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக இணை இயக்குநர் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர் டி.எல்.பாலகுமார் வரவேற்கிறார். சைமா துணைத் தலைவர் செந்தில்குமார் சிறப்புரையாற்றுகிறார். கண்காட்சியில் 30-க்கு மேற்பட்ட அரங்குகள் அமைந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்குகிறார். மத்திய ஜவுளித்துறை ஆணையர் கிரண்சோனி குப்தா கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். பெடக்சில் துணைத் தலைவர் கருணாநிதி நன்றி கூறுகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai